தனது இராணுவத் தேவைகளுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாகக் குறைத்து, உள்நாட்டிலேயே ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் ‘Build at Home’ என்ற பிரம்மாண்டமான பாதுகாப்புத் திட்டத்தை, மத்திய அரசு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
தற்போது கடற்படையின் 54% கப்பல்களும், விமானப்படையின் 55% விமானங்களும் போருக்குத் தயாராக இல்லாத நிலையில் உள்ளன.
இனிவரும் காலங்களில் விமானப்படையின் 85% விமானங்கள் மற்றும் ராணுவத்தின் 80% வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை இந்தத் திட்டம் உறுதி செய்யும்.
அடுத்த பத்து ஆண்டுகளில் தனது பாதுகாப்பு ஒப்பந்தங்களில் 70 சதவீதத்தை கனேடிய நிறுவனங்களுக்கே வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக 6.6 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் 2035-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பல பாகங்களிலும் முழுவதும் 1.25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
