ஓராண்டுக்கு முன்பு, அல்பேட்டாவின் ஜாஸ்பர் நகரத்தை உலுக்கிய காட்டுத்தீயினால், பாதிக்கப்பட்ட பல குடியிருப்பாளர்கள் கனடா முழுவதும் சிதறி வாழ்கின்றனர்.
ஜாஸ்பர் நகரக் கட்டிடங்களில் மூன்றில் ஒரு பங்கை, காட்டுத்தீ அழித்த நிலையில், இன்றும் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாமல், அவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஜாஸ்பர் காட்டுத்தீ என்று அழைக்கப்படும் அந்த காட்டுத்தீயானது, ஜாஸ்பர் நகரத்தின் 5,000 குடியிருப்பாளர்களை, இடம்பெயரச் செய்தது.
கல்கரியைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் மோர்கன் கிட்சன், காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது உயிரிழந்தார்.
பேரழிவை ஏற்படுத்திய இந்த காட்டுத்தீ, நகரத்தை அழித்து ஓராண்டு ஆகிய நிலையில், இது தொடர்பான நினைவுகூரல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜாஸ்பர் நகரசபை இது தொடர்பில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
