ஒன்டாரியோவில் உள்ள குடியிருப்புகளின் வெப்பநிலையை அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தும் புதிய சட்ட முன்மொழிவு, நில உரிமையாளர் சங்கங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, கணிசமான அரசு உதவி தேவைப்படும் என்று நில உரிமையாளர்களின் நலனுக்காகப் போராடும் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒட்டாவா சென்டர் தொகுதி என்டிபி கட்சியின் உறுப்பினர். கேத்தரின் மெக்கின்னி இந்த இலையுதிர்காலத்தில் மாகாண சபையில், இது தொடர்பான சட்ட முன்மொழிவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
தீவிர வெப்பநிலையின் அச்சுறுத்தலில் இருந்து குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம்.
கனடாவின் பெரிய நகரங்களில் வெப்பம் தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதால், இது ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
