Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆகஸ்ட் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண பொதுத்தேர்தல் பிரசாரம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், பழங்குடியினப் பெண்களை இழிவுபடுத்தும் இனவாதச் சொல்லைப் பயன்படுத்திய தனது கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா காரியேபியைத் (François Gariépy) தொடர்ந்தும் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதாக பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி அறிவித்துள்ளது.

கியூபெக் மாகாணச் சட்டமன்றத் தேர்தல் ஒக்டோபர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சார்லெவோய்-கோட்-டி-போப்ரே (Charlevoix-Côte-de-Beaupré) தொகுதியில் பார்ட்டி கியூபெக்வா கட்சி சார்பில் வானொலிச் செய்தி தொடர்பாளரான பிரான்சுவா காரியேபி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இணையவழி ஒலிபரப்பு (Podcast) ஒன்றில் உரையாடிய பிரான்சுவா காரியேபி, பழங்குடியினப் பெண்களைக் குறிக்கப் பயன்படும் “ஸ்கவா” (Squaw) எனும் இனவாத மற்றும் பாலின ரீதியிலான இழிவுச் சொல்லைப் பயன்படுத்தியமை தற்போது தெரிய வந்துள்ளது.

இச்சொல் வட அமெரிக்க பழங்குடியின சமூகத்தினரால் மிகவும் புண்படுத்தக்கூடிய சொல்லாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரான்சுவா காரியேபி, “தான் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக வருந்துவதாகவும், பழங்குடியின மக்களைக் காயப்படுத்தும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon), காரியேபியின் பேச்சு தவறு என்பதை ஒப்புக்கொண்டதாலும், அவர் தனது தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதாலும், அவரை வேட்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பார்ட்டி கியூபெக்வா கட்சியின் இந்த நடவடிக்கைக்குக் கியூபெக் மற்றும் லாப்ரடோர் பழங்குடியின தேசிய அவையின் தலைவர் பிரான்சிஸ் வெரோ-போல் (Francis Verreault-Paul) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்
அடுத்த செய்தி நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் சூறாவளி பாதிப்பு – 1,500 ஊழியர்கள் களத்தில் அர்ப்பணிப்பு

மார்ச் 19, 2026
கியூபெக்

கியூபெக்கின் முதற்குடிகளுக்கான பல்கலைக்கழகம் குறித்த தகவலை முதற்குடிகளின் கல்விப்பேரவை வெளியிட்டுள்ளது!

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

ஜூலை 17, 2026
கியூபெக்

கஸ்பே தீபகற்ப மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?