கியூபெக் மாகாணத்தின் கஸ்பே (Gaspé) தீபகற்ப பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக மகப்பேறு வார்டுகள் (Obstetrics Units) அடிக்கடி மூடப்பட்டு வருகின்றன.
இதனால், இந்த கஸ்பே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காகப் பனிப்பொழிவுக்கு மத்தியில் பல மணிநேரம் பயணித்து அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, செயிண்ட்-ஆன்-டெஸ்-மாண்ட்ஸ் (Sainte-Anne-des-Monts) மருத்துவமனையில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 133 நாட்கள் மகப்பேறு சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
எதிர் வரும் மாதங்களில், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை இந்த மகப்பேறு வார்டுகள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கஸ்பே பகுதிஅதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிராந்திய சுகாதார சபையானது, இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக, வெளிநாட்டுச் செவிலியர்களை நியமிக்க முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
