டொராண்டோவின் நார்த் யோர்க் (North York) பகுதியில் நிகழ்ந்த கார் விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப் படுகின்றன.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரக் கடைக்குள் புகுந்ததில், அங்கிருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் நால்வர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் டஃபரின் வீதி மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ (Dufferin Street and Finch Avenue West) சந்திப்பில் நடைபெற்றுள்ளது.
விபத்து நடந்தவுடன் ஓட்டுநர் தப்பிச் செல்லாமல் அங்கேயே இருந்து போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



