கியூபெக் மாகாணத்தின் தேர்தல் தொகுதிகளை மாற்றி அமைப்பது தொடர்பான சர்ச்சையில், மாகாண அரசு இப்போது உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாட முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகை குறைந்து வரும் பகுதிகளில் உள்ள தொகுதிகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை, கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்தே, கியூபெக் மாகாண அரசினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மாகாணத்தின் சில கிராமப்புறப் பகுதிகள் தங்களின் அரசியல் செல்வாக்கை இழந்துவிடும் என கியூபெக் அரசு கவலை தெரிவித்துள்ளது.
கியூபெக் சட்டப்படி, ஒவ்வொரு இரண்டு தேர்தல்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை மாற்றத்திற்கு ஏற்பத் தேர்தல் தொகுதிகள் (Ridings) மாற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
