கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டமானது, மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று, கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் மத்தியில், இந்த “கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம்” பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
கியூபெக்கின் முன்னாள் பிரீமியர் பிரான்சுவா லெகோவின் (François Legault) தலைமையிலான கடந்த அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் ஆனது முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கோரி பல அமைப்புகள், கியூபெக் மாகாணத்தின் முக்கிய நகரங்களின் மேயர்கள், வணிகக் கூட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், கியூபெக்கின் புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தலைமையிலான தற்போதைய அரசால், இத்திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது.


