நாட்டில் தற்போது கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முட்டைகளின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி முட்டையின் விலையை 2 ரூபாவால் குறைக்கப்படும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்நிலையில் சிவப்பு முட்டையொன்றின் விலை 29 ரூபாவாகவும், வெள்ளை முட்டையின் விலை 27 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோழி இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் முட்டை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.


