கியூபெக் மாகாணத்தில் தட்டம்மை (Measles) நோய் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, மொன்றியல் நகரின் முக்கிய இடங்களுக்கு கியூபெக் பொது சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை கியூபெக் மாகாணம் முழுவதும் 6 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மொன்றியல் தீவுப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய மருத்துவமனைகள் மற்றும் சில வணிக வளாகங்கள் நோய் பரவல் அபாயம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சமீபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்ற இடங்களின் பட்டியலை கியூபெக் அரசு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
