Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கினை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசுடன் 1,000 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜூன் 3, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசும் மத்திய அரசும் இணைந்து சுமார் 1,000 கோடி டொலர் பெறுமதியான ஐந்து முக்கிய உள்கட்டமைப்பு உடன்படிக்கைகளில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் பொதுப் போக்குவரத்து, சுகாதாரம், வீடமைப்பு மற்றும் உயர்கல்வித் துறைகளை, அடுத்த பத்தாண்டுகளில் முற்றாக நவீனமயமாக்கும் நோக்கிலேயே இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெடுநாட்களாக இழுபறியில் இருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதியுதவி ஒப்பந்தத்தை, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) ஆகிய இருவரும் இணைந்து, லோங்காய் நகரில் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டனர். இந்த 1,000 கோடி டொலர் நிதியானது, கியூபெக் மாகாணத்தின் பல்வேறு தேவைகளுக்காகப் பிரிக்கப்பட்டு முதலீடு செய்யப்படவுள்ளது.

ஒட்டுமொத்த நிதியில் 600 கோடி டொலருக்கும் அதிகமான நிதி, கியூபெக் மாகாணத்தின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளை நவீனப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா பொதுப் போக்குவரத்து நிதியின் (CPTF) கீழ், 440 கோடி டொலர்
நிதி, மொன்றியல் மெட்ரோவின் புளூ லைன் (Blue line) விரிவாக்கம் மற்றும் கியூபெக் சிட்டி அதிவேகப் போக்குவரத்து (Tramway) போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள போக்குவரத்து வலையமைப்புகளைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில், 132.9 கோடி டொலர் அடிப்படை நிதி வழங்கப்படவுள்ளது.

100 கோடி டொலர் நிதி கியூபெக் மாகாண சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 17 மாகாண மருத்துவமனைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது. 270 கோடி டொலர் நிதி, கியூபெக் மாநிலத்தின் வீடமைப்பு, பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. கியூபெக்கின் முன்னாள் முதல்வர் பிரான்சுவா லெகோட்டின் (François Legault) மாகாண அரசு நிர்வாகம் ஆனது, மொன்றியல் மற்றும் கியூபெக் சிட்டியின் போக்குவரத்துத் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்திருந்தது.

இந்த நிலையிலேயே, கியூபெக்கின் தற்போதைய புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் காலத்தில் இந்த வெற்றிகரமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி கனடா, முதலான 60 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்கிறது அமெரிக்கா
அடுத்த செய்தி மொன்றியலின் அடையாளச் சின்னமான மவுண்ட் ராயல் சிலுவை புனரமைப்புக்காக மூடப்பட்டது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மத்திய நகரப்பகுதியில் வேட்பாளரை இழந்தது கன்சர்வேட்டிவ் கட்சி!

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிப்பு

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரையம்பதியில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?