எதிர்வரும் வாரங்களில் இடம்பெறவுள்ள கனேடிய பொதுத்தேர்தலில், கியூபெக் மத்திய நகரப்பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எந்த வேட்பாளர்களும் இல்லை எனத் தெரியவருகின்றது.
வேட்புமனு சமர்ப்பிப்பதில் எதிர்நோக்கிய பிரச்சினை காரணமாகவே கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கியூபெக் மத்திய நகரப்பகுதியில் தனது வேட்பாளராக Chanie Thériault ஐ, கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்திருந்தது. Chanie Thériault இனால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பாளர் விண்ணப்பப்படிவம் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைவாக இல்லை என, கனேடிய தேர்தல்கள் திணைக்களம்
அறிவித்துள்ளது.
இதனையடுத்து, கியூபெக் மத்திய நகரப்பகுதியில் தனது சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிடவில்லை என, கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.