கியூபெக்கின் முதற்குடிகளுக்காக அவர்களால் உருவாக்கப்படும் பல்கலைக்கழகம் குறித்த தகவலை முதற்குடிகளின் கல்விப்பேரவை வெளியிட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள பிற பல்கலைக்கழகங்களின் பங்களிப்புடன் இந்த பல்கலைக்கழகம் தோற்றம் பெறுகின்றது.
அதிக முதற்குடி மாணவர்கள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து பட்டயங்களைப் பெறுவதற்கு உதவுதலை, தனது முதல் நோக்கமாகக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம், அதிக தகுதி வாய்ந்த முதற்குடி மக்களை ஆசிரியர்களாகப் பயிற்றுவித்து உருவாக்குதல் தொடர்பிலும் செயற்படவுள்ளது.
முதற்குடிகளின் குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காணும் நோக்குடன், ஒரு விபரச்சேகரிப்பாய்வும் தற்போது அங்கு நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.