Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் ‘பென்டானில்’ (Fentanyl) மற்றும் அதைவிடப் பல மடங்கு வீரியமிக்க ‘கார்பென்டானில்’ (Carfentanil) முதலான ஆபத்தான போதைப்பொருட்களின் பாவனையால், மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளதாகப் பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மொன்றியல் பிராந்திய பொதுச்சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் பதிவான சந்தேகத்திற்கிடமான மரணங்களில், குறைந்தது 8 பேரின் மரணத்திற்குக் ‘கார்பென்டானில்’ என்ற ஆபத்தான போதைப்பொருளே காரணம் என ஆய்வகப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நச்சியல் (Toxicology) பரிசோதனை முடிவுகள் வெளிவர தாமதமாவதால், இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்த ஆண்டின் ஜனவரி முதல் தற்போது வரை மாத்திரம் போதைப்பொருள் பாவனை காரணமாகப் பாதிக்கப்பட்ட 925 பேருக்கு அவசர மருத்துவக் குழுக்களால் ‘நெலோக்சோன்’ (Naloxone) என்ற நச்சுமுறி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இது கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதிலும் பதிவான மொத்த அவசர சிகிச்சை விபரங்களை விட அதிகமாகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள ‘கார்பென்டானில்’ என்ற செயற்கை ஓபியாய்டு (Synthetic Opioid) வகை போதைப்பொருள், ஏற்கனவே ஆபத்தானதாகக் கருதப்படும் ‘பென்டானில்’ போதைப்பொருளை விட 100 மடங்கு அதிக வீரியம் கொண்டதாகும் எனவும் இதன் மிகச் சிறிய அளவே ஒருவரைக் கொல்லப் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புச் சந்தையில் ‘பென்டானில்’ என்ற பெயரில் விற்கப்படும் போதைப்பொருள் கற்கள் மற்றும் தூள்களில், இந்த கார்பென்டானில் கலக்கப்படுவதுடன், ‘மெடெட்டோமிடைன்’ (Medetomidine) எனப்படும் கால்நடை மயக்க மருந்தும், சில நேரங்களில் ‘பென்சோடியாசெபைன்கள்’ (Benzodiazepines) போன்ற மனஅமைதி மருந்துகளும் ஆபத்தான முறையில் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!
அடுத்த செய்தி நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதத்தில் சரிவு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்து மிதிப் பலகையில் பயணித்த நபர் ஒருவர் உயிரழப்பு!

மே 29, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்

செப்டம்பர் 20, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

107 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணி.

ஜூன் 16, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?