லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இவ்விடயம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவா கேலண்ட் போரின், புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம்.
எங்களுடைய கவனம் வடக்கு பகுதியில் செலுத்தப்படும். அந்த பகுதியில் வளங்கள் மற்றும் படைகளையும் ஒதுக்கியுள்ளோம்.
எங்களுடைய திட்டம் தெளிவாக உள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதி சமூகத்தினரை அவர்களுடைய சொந்த வீட்டுக்குப் பாதுகாப்பாக திரும்ப செய்வதற்கான பணிகள் உறுதி செய்யப்படும்.
இதற்குப் பாதுகாப்பு சூழ்நிலை நிச்சயம் மாற்றப்பட வேண்டும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.