Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை:RCMP அதிரடி அறிவிப்பு!

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீக்கியப் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் தற்போதைய கூட்டுப் புலனாய்வில் கண்டறியப்படவில்லை என, றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இது, முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் தத்தளிப்பை ஏற்படுத்திய அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து கனடா பின்வாங்குவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பியப் பாதுகாப்பு முகவரகங்கள் இணைந்து நடத்திய ‘ஒபரேஷன் ஹார்ட்பால்’ (Operation Hard Ball) என்ற சர்வதேசக் கூட்டு நடவடிக்கை மூலம், இந்தியாவில் சிறையில் இருக்கும் பிரபல நிழல் உலகக் குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது பங்காளர் கோல்டி ப்ரார் ஆகியோர் மீது, நிஜ்ஜார் படுகொலை தொடர்பில்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில், கனேடிய ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய, றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களத்தின் துணை ஆணையர் லிசா மோர்லாண்ட் (Lisa Moreland), “இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மீதான விசாரணையிலோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலோ,
இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் வெளிவரவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களத்தின் துணை ஆணையர் லிசா மோர்லாண்டின் இந்த கருத்து, நாட்டின் முன்னைய அரசியல் மற்றும் உளவுத்துறை நிலைப்பாடுகளுடன் முற்றிலும் முரண்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கனேடியப் பொலிஸாரின் இந்தத் திடீர் நிலைப்பாடு குறித்து, கனடாவில் உள்ள சீக்கிய கூட்டமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!
அடுத்த செய்தி இராணுவத்தை நவீனப்படுத்தும் கனடா; 550 ஆக உயரும் கவச வாகன எண்ணிக்கை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு

மே 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

20 தமிழ் சிங்கள தம்பதியினருக்கு திருமணம்

அக்டோபர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

நவம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?