டி20 சர்வதேச உலக கிண்ண போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் 36 வது லீக் தொடரானது புளோரிடாவில் இடம்பெறுகின்றது.
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியே இடம்பெறுவதோடு இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 106 ஓட்டங்களை பெற்றது. இந்த அணியின் கரீத் டெலானி 31 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பாகிஸ்தான் அணி சார்பாக ஷாஹின் அப்ரிடி, இமாத் வாசிம் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும் முகமது அமீர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியதுடன் 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியானது போட்டியில் களம் இறங்குகின்றது.