இந்தியாவின் அரியலூர் மாவட்டத்தின் உட்கொட்டை கிராமத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது. பாலமுருகன் சங்கீதா தம்பதிகளின் ஆண் குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளது.
இந்த கொலைக்கான பின்னணியை தேடி ஆராய்ந்த பொலிஸார் கொலையாளியை பிடித்துள்ளனர். சங்கீதா தனது ஆண் குழந்தையை தனது வீட்டிற்க்கு அழைத்து சென்ற போதே இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதியானது சங்கீதாவின் அருகில் உறங்கி கொண்டிருந்த குறித்த ஆண் குழந்தையானது காணாமல் போயுள்ளது. குழந்தையை காணாது அனைவரும் தேடிய நிலையில் வீட்டில் உள்ள நீர் நிரப்பப்பட்ட தாங்கியொன்றிலிருந்து துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடாத்திய போது குழந்தையின் தாத்தா மூட நம்பிக்கையால் தனது பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. இதன்படி ஜெயங்கொண்டம் பொலிஸார் குற்றவாளியான வீரமுத்துவை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.