இளைஞன் ஒருவரின் சடலம், ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் 22 வயதானவர் என்றும் உடவேரியவத்தையிலுள்ள ஒஹிய விகாரைக்கருகில் வசிப்பவர் என்றும் கூறப்படுகிறது.
இளைஞனின் திடீர் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹல்துமுல்ல, பண்டாரவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
