ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்படவுள்ள புதிய தடைகளை அமெரிக்கா இறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வங்கி மற்றும் வலுசக்தி துறைகள் சார்ந்து, அமெரிக்கா புதிய தடைகளை அறிவிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர் நிறுத்த முயற்சிகளில் ரஷ்யாவின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகள் அமெரிக்க ஜனாதிபதியினால் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ரஷ்யா நிராகரித்த விடயத்தில் அமெரிக்கா விரக்தியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.