Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கார்டி ஹோவ் சர்வதேசப் பாலம் தொடர்பில் மத்திய அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க “கார்டி ஹோவ் சர்வதேசப் பாலம்” (Gordie Howe International Bridge) மூலம் கிடைக்கும் சுங்கவரி வருமானம், அதன் கட்டுமானக் கடன்கள் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இதனைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒன்ராறியோவின் லண்டன் நகரில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே பிரதமர் மார்க் கார்னி இதனை உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் வாரக்கணக்கிலான இழுபறிகளுக்குப் பின்னர், வரும் இம்மாதம் 27ஆம் திகதி இப்பாலம் போக்குவரத்திற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவுடன் எட்டப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் கனடாவுக்குப் பாரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்ற விமர்சனங்களை மறுத்த பிரதமர், இது “கனடாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஒப்பந்தம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்ராறியோவின் வின்சர் (Windsor) மற்றும் மிச்சிகனின் டெட்ராய்ட் (Detroit) நகரங்களை இணைக்கும் இப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி லாக்-மெகாந்திக் நகரில் சரக்கு ரயில்களுக்கான புறவழிப்பாதை திட்டத்திற்கு அனுமதி
அடுத்த செய்தி அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசு கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் அவமரியாதையானவை அவை நிறுத்தப்பட வேண்டும்-பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 17, 2025
கனடா

முதல்வர் டக் ஃபோர்ட்டின் ஜெட் விமானத்தை விற்பனை செய்ய தீர்மானம்

ஏப்ரல் 20, 2026
கனடாமுதன்மை செய்தி

நுனாவுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சியில் இணைந்தார்

மார்ச் 11, 2026
அண்மைய செய்திகள்கனடா

லிபரல் கட்சிக்குத் “தாவியதற்கான காரணம் இதுதான்”- கிறிஸ் டி’என்ட்ரெமான்ட்

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?