Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

லாக்-மெகாந்திக் நகரில் சரக்கு ரயில்களுக்கான புறவழிப்பாதை திட்டத்திற்கு அனுமதி

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள லாக்-மெகாந்திக் (Lac-Mégantic) நகரின் மையப்பகுதியில் இருந்து சரக்கு ரயில்களை முழுமையாகத் திசைதிருப்பி மாற்றுப் பாதையில் இயக்குவதற்கான ‘புறவழிப்பாதை’ (Rail Bypass) திட்டத்திற்கு, மத்திய போக்குவரத்து ஒழுங்குமுறை முகவரகம், உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம் பல ஆண்டுகளாக தாமதமாகி வந்த இத்திட்டத்தின் சட்டரீதியான தடை நீங்கியுள்ளது.

மத்திய போக்குவரத்து முகவரகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, லாக்-மெகாந்திக் நகர மையத்திலிருந்து ரயில்களைத் திசைதிருப்புவதற்காக 12.5 கிலோமீட்டர் நீளமுடைய புதிய ரயில்பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தில் 47 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த மாற்றுப் புறவழிப்பாதையை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அதனை அமுல்படுத்துவதற்கான அனுமதி கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அனுமதி கோரப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் தற்போது, அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதையினால் அப்பகுதியிலுள்ள பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் சார்ந்த தாக்கங்கள், குடிநீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்புகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, விசேட நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் நடத்தப்பட்ட  அதிரடிச் சுற்றிவளைப்புத் தாக்குதல்களில் மூவர் கைது
அடுத்த செய்தி கார்டி ஹோவ் சர்வதேசப் பாலம் தொடர்பில் மத்திய அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் மீண்டும் வெடித்தது மதச்சார்பின்மை விவாதம்.

மார்ச் 14, 2026
கியூபெக்

மொன்றியல் காவல்துறையினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஜூன் 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் மாநகர தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜனவரி 29, 2026
கியூபெக்

மொண்ட்ரியலில் சர்ச்சைக்குரிய சைக்கிள் பாதைகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவு

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?