2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்தும் நான்கு உலகளாவிய நகரங்களில் ஒன்றாக மொன்றியல் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2028 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் கியூ-சீரிஸ் (Olympic Q-Series) தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை மொன்றியல் நகரம் பெற்றுள்ளது.
உலகளவில் ஷாங்காய், டோக்கியோ மற்றும் ஆர்லாண்டோ முதலான நகரங்களுடன் இணைந்து மொன்றியலும் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளது. தில் 3×3 கூடைப்பந்து, கடற்கரை கைப்பந்து, பி.எம்.எக்ஸ் (BMX) சைக்கிள் பந்தயம், ஸ்கேட்போர்டிங் மற்றும் முதல்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகமாகும்பிளாக் ஃபுட்பால்(Flag Football) உள்ளிட்ட பல போட்டிகள்
இடம்பெறவுள்ளன.
மொன்றியலின் புகழ்பெற்ற ஒலிம்பிக் பூங்காவில் (Olympic Park) அனைத்துப் போட்டிகளும் ஒரே மையத்தில் நடைபெறும் எனத் தெரிய வருகின்றது.
இந்த பிரம்மாண்ட நிகழ்வை நடத்த சுமார் 28 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் ஆயிரக்கணக்கான சர்வதேசப் பார்வையாளர்கள் மொன்றியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
