Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசு கட்சி

ஜூலை 17, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்

தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் தமிழரசு கட்சியின் கொள்கையானது முஸ்லிம்களுக்கு சுயாட்சி திட்டத்துக்காக இந்த 6 கட்சிகள் கொண்ட திருட்டுக் கூட்டணி அமைக்கப்பட்டள்ளது.

எனவே இந்த சுயாட்சி திட்டத்தை செயல்படுத்த சம்பந்தன் தலைவர் பிரபாகரனை முடித்துவிடச் சொன்னாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று வியாழக்கிழமை (16) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் முதலாவது விதியில் தமிழர்களுக்கான சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும் அதேபோல் முஸ்லிம்களுக்கு சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம்.

எனவே இதனடிப்படையில் இந்த தமிழரசு கட்சி எம்.சுமந்திரன். இரா சாணக்கியன் செயற்படுவார்கள் ஆகவே இந்த யாப்பை தேசிய தலைவர் பிரபாகரன் பார்க்கவில்லையா? அல்லது அன்ரன் பாலசிங்கம் பார்க்கவில்லையா? அது ஒரு கேள்வியாக உள்ளது.

அதேவேளை தனித் தமிழ் ஈழம் என்ற இலக்கு எத்தனை ஆயிரம் மக்களை இழந்துள்ளோம் எத்தனையாயிரம் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். அத்துடன் சகோதரப் படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இத்தனைக்கும் தனித் தமிழ் ஈழத்துக்காக நாங்கள் போரடிக் கொண்டிருக்கும் போது இந்த தமிழரசு கட்சி இத்தனை வருடமாக முஸ்லிம்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என செயல்பட்டுள்ளனர்.

அதனால்தான் என்னவோ தெரியவில்லை சம்பந்தன் தலைவர் பிரபாகரனை முடித்து விட சொன்னதாக சொன்னார்கள் எனவே இது தான் காரணமா? சுயாட்சியை முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டும் என சொன்னால் வந்தேறு குடிகள் முஸ்லிம்களுக்கு எப்படி வடக்கு கிழக்கில் சுயாட்சியை கொடுக்க முடியும்.

கடந்த மைத்திரி ஆட்சியின் போது முஸ்லிம் ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டு வந்தார்கள். எனவே எங்கள் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் அம்பாறை மாவட்டத்தை தாரை வைப்பதற்கான உரிமையை யார் தந்தது? நீங்கள் யார்?

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 50 இற்கு மேற்பட்ட தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்டு ஆக்கிரமித்துள்ளனர். இவ்வாறு அம்பாறையில் தமிழ் மக்களின் கிராமங்கள் பறிபோனதை எதிர்த்து ஏன் தமிழரசு கட்சி குரல் கொடுக்கவில்லை அதற்கு எதிராக ஏதாவது போராட்டம் செய்தார்களா? இல்லை

இவைகள் அனைத்தும் தெரிந்துதானே எல்லோரும் இயங்கி கொண்டிருக் கின்றீர்கள் காலம் காலமாக கிழக்கு மாகாண தமிழர்களை ஏன் ஏமாற்றி வருகின்றீர்கள். இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நல்லாட்சி காலத்தில் தீர்வு காணப்பட வேண்டியது அதற்கான தீர்வுகளை தமிழரசு கட்சி ஏன் எட்டிக் கொள்ளவில்லை?

எனவே தமிழர்களின் போராட்டத்தை கடந்த காலத்தில் எதிர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்த இந்த 6 கட்சிகளை கொண்ட திருட்டு கூட்டணி வெற்றி பெறாது என்பதுடன் கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு போராட்டத்தை; நாங்கள் நடாத்துவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம்.

எனவே இவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை அதனால் தான் திருட்டு கூட்டணி அமைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் பெரிய ஒரு துரோகச் செயல் ஈடுபட்டுள்ளனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு செயற்படவும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கார்டி ஹோவ் சர்வதேசப் பாலம் தொடர்பில் மத்திய அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி மயிலிட்டி கொமோண்டோ பங்களா முன் 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

நல்லூர், மனோன்மணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்…

ஏப்ரல் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தளத்திற்கான ரயில் சேவைகள் நீடிப்பு

டிசம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – டக்ளஸ் தேவானந்தா

ஜூலை 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது!

ஜூலை 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?