‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புகழ்பெற்ற ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் ஒட்டுமொத்தப் பகுதி மக்களுக்குச் செலுத்தும் “மரியாதையின் நிமித்தமாகவும்” மக்கள் பெருமளவில் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கிலும், கியூபெக் தேசிய தினக் கொண்டாட்டங்களை முற்றாக ரத்து செய்துள்ளதாக, கோட்-டெஸ்-நெய்ஜஸ் வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (SDC Côte-des-Neiges), அறிவித்துள்ளது.
மேலும், கியூபெக் மாகாணப் பொலிஸாரின் குற்றவியல் மற்றும் தடயவியல் புலனாய்வு நடவடிக்கைகள் சம்பவ இடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால், கோட்-டெஸ்-நெய்ஜஸ் பிரிவுக்கு உட்பட்ட நூலகங்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட பொது நகராட்சி மையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.


