ஒட்டாவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம், மின்சாரத் தேவையை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த திங்கட்கிழமை, 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு மாகாணத்தின் மின்சாரத் தேவை இரண்டாவது முறையாகவும் அதிகபட்ச உச்சத்தைத் தொட்டது.
வெப்பத்தில் இருந்து தப்பிக்க, ஒன்ராறியோ மாகாணத்தின் குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனத்தினர் முதலானோர், குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்விப்பான்கள் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தியதால், மாகாணத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை கிட்டத்தட்ட 25,000 மெகாவாட்டாக உயர்ந்தது.
ஒன்ராறியோவின் மின்சார விநியோகத்தை நிர்வகிக்கும் Independent Electricity System Operator (IESO) என்ற அரசு நிறுவனத்தின் கூற்றுப்படி, இது, இந்த ஆண்டின் ஜூன் 24-க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச உச்ச நுகர்வாக அமைந்துள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் மின்சாரத் தேவை இன்னும் அதிகமாகும் என்று Independent Electricity System Operator நிறுவனம் கணித்துள்ளது.
050-ம் ஆண்டுக்குள், மின்சாரத் தேவை 75 சதவீதம் அதிகரிக்கும் என தாம் கணித்துள்ளதாக, Independent Electricity System Operator நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
