ஒண்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton), நயாகரா (Niagara) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சக்திவாய்ந்த குளிர் காற்று வீச்சு (Cold Front) தெற்கு ஒன்டாரியோ பிராந்தியத்தைக் கடந்து செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் ஈரி ஏரி (Lake Erie) கரையோரப் பகுதிகளுக்கு ‘மஞ்சள் நிற’ (Yellow Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டன், பர்லிங்டன் மற்றும் பிராண்ட்ஃபோர்ட் ஆகிய நகரங்களில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என, கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
