நாட்டின் புதிய வம்சாவளிக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்ட கனேடியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் (Citizenship Certificates) திடீரென மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒரு “குறிப்பிட்ட தவறு” நடந்துள்ளதை குடிவரவு மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் லேனா மெட்லெட்ஜ் தியாப் (Lena Metlege Diab), ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து முழுமையான உள்விசாரணை நடத்துமாறு, அவர் தனது துறைக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒட்டாவா நகரில் நடைபெற்ற உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய குடிவரவுத் துறை அமைச்சர் லேனா தியாப், புதிய வம்சாவளிச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்ற பலருக்கு, தங்களின் குடியுரிமைச் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்ட விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
நடைபெற்ற தவறு என்னவென்று துல்லியமாகக் கண்டறியும் வரை, புதிய விண்ணப்பங்களை இறுதி செய்யும் (Finalizing) நடைமுறைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.


