மொண்ட்ரியல் நகர் – ஆங்கிரிக்னான் பூங்காவில் (Angrignon Park) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு குறித்த விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆங்கிரிக்னான் பூங்காவில் (Angrignon Park) நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வு (Party) ஒன்றின் போது திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.
அங்கிருந்த பொதுமக்களை நோக்கி ஆபத்தான முறையில் பாய்ந்த கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒருவரை, பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த காரில் இருந்த மேலும் இருவர் தப்பியோடியதையடுத்து, அவர்களைத் தேடி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை பலனளிக்கவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள 18 வயது வாலிபர் தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய இரு சந்தேகநபர்களின் அடையாளங்கள் மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


