கியூபெக்கில் தட்டம்மை நோய் மீண்டும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் முதல் இந்த மார்ச் மாதம் தற்பொழுது வரை குறைந்தது 31 தட்டம்மை நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான காரணம் – தடுப்பூசி செலுத்தும் விகிதங்கள் குறைவடைந்தமை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுணர்.
“தட்டம்மை ஏன் பரவுகிறது அல்லது கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கான காரணங்கள் அனைத்திற்கும் ஒன்றிணைக்கும் கருப்பொருள் மிகவும் எளிமையானது எனவும் குறைந்த தடுப்பூசி விகிதங்கள்,” என மெக்கில் பல்கலைக்கழக சுகாதார மையத்தின் (MUHC) தொற்று நோய் நிபுணர் டாக்டர் டொனால்ட் வின் தெரிவித்துள்ளார்.
கியூபெக் பொது சுகாதாரத் தரவுகளின் படி , COVID-19 தொற்றுநோய்களின் காலத்தின் தட்டம்மை நோய்க்கான போது தடுப்பூசி விகிதங்கள் குறைந்துள்ளதைக் சுட்டி காட்டியுள்ளது.
மொன்ட்ரியல் மாகாணம் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி செலுத்துவதில் மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது, இது தொற்றுநோய்க்கு முதல் 85 சதவீதமும் 2024 இல் 83 சதவீதமும் என கியூபெக் பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.