Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர்

ஜூன் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள நிலத்தடி நீர் இருப்பு (Groundwater reserves) முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாகக்  குறைந்து  வருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இணைந்து மாகாண அரசுக்கு இவ்விடயம் தொடர்பான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தின் நிலத்தடி நீர் இயற்கை முறையில் மீண்டும் ஊறி நிரம்பும் அளவை விட, மனிதப் பயன்பாட்டிற்காக உறிஞ்சப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதே, இந்த அபாயகரமான சூழ்நிலைக்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாகாணத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரிக்கு (Pascale Déry) 12 உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் 9 முன்னணி சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து, உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

கியூபெக் மாகாணமானது உலகின் புதுப்பிக்கத்தக்க நன்னீர் இருப்பில் சுமார் 3 சதவீதத்தைக் கொண்டுள்ள போதிலும், கடந்த காலங்களைப் போல நீர்வளத்தை ஒரு எல்லையற்ற வளமாக இனிமேலும் கருத முடியாது என அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, செயின்ட் லாரன்ஸ் பள்ளத்தாக்கு (Saint-Lawrence Valley) பகுதியில் அமைந்துள்ள நகரசபைகள் இந்த நீர் பற்றாக்குறை அச்சுறுத்தலை நேரடியாக எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளமை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி லவால் பிராந்தியத்தில் திடீரென முடக்கப்பட்ட தொலைத்தொடர்பு!
அடுத்த செய்தி மொண்ட்ரியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி

ஏப்ரல் 8, 2026
கியூபெக்

வளர்ப்புப் பிராணிகளுக்கு தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள் மனித உரிமைகளுக்கு எதிரானது

மார்ச் 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின்அடுத்த ‘தலைமை விஞ்ஞானியாக பேராசிரியர் ஜெரோம் டுப்ராஸ் நியமிப்பு

மே 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

சர்ச்சில் ஃபோல்ஸ் நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான ஒரு புதிய உடன்படிக்கை

மே 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?