கியூபெக் மாகாணத்தில் கியூபெக் நகரம் மற்றும் லெவிஸ் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் மற்றும் சுரங்கப்பாதை கொண்ட & மூன்றாவது
இணைப்பு உள்கட்டமைப்பு திட்டத்திற்கு பழங்குடி சமூகத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்களைத் கலந்தாலோசிக்காமல், தாங்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அடையாளம் கண்ட நிலத்தின் வழியாகச் செல்லக்கூடிய ஒரு திட்டத்தை முன்வைத்ததே, இந்த எதிர்ப்பிற்குக் காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கியூபெக் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெனீவிவ் கில்பூல்ட் (Geneviève Guilbault), வியாழக்கிழமை அன்று இந்த புதிய இணைப்பு நெடுஞ்சாலையானது, 20 மற்றும் 40 ஆகியவற்றை இரண்டு நகரங்களுக்கும்
இடையில் இணைக்கும் என்று அறிவித்தார்.
இருப்பினும், இந்த முடிவு நான்கு பிராந்திய பழங்குடி சமூகத் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.