Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கைமுதன்மை செய்தி

இஷாரா செவ்வந்தி பாதுகாப்பாக தலைமறைவு – விசாரணையில் தகவல்

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

சட்டத்தரணி வேடம் அணிந்து வந்த நபர் ஒருவரால் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.

காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பிரதான சந்தேகநபரை அன்றைய தினமே கைதுசெய்தனர்.

நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கில் வேன் ஒன்றில் பயணித்த போதே புத்தளம் பாலாவி பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும் இந்த திட்டங்களுக்கு வழிவகுத்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி இதுவரை கைதுசெய்யப்படவில்லை

இந்த நிலையில் தற்போது கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 20 அதிகாரிகளின் தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொலை இடம்பெற்ற அன்றைய தினம் கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபட்ட காவல்துறை விசேட அதிரடிப்படையினர்,சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேரின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யக் கொழும்பு குற்றவியல் பிரிவு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

சம்பவம் தொடர்பாக 15 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு காவல் நிலையத்தின் கான்ஸ்டபிளுக்கு ஏற்கனவே கொலைத் திட்டம் தொடர்பில் தெரிந்திருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, டுபாயில் உள்ள கெஹல்பத்தர பத்மே மற்றும் ஷான் அரோஷ எனப்படும் மத்துகம ஷான் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் அவர்களுக்கு உதவும் நபர்களின் பாதுகாப்பில் உள்ளதாக தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!
அடுத்த செய்தி சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோ தேர்தலுக்கு பாதிப்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்

ஜூலை 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

ஆகஸ்ட் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

டிசம்பர் 9, 2025
இலங்கை

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை மாணவர்களின் ஒளிவிழா

டிசம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?