உளவுத்துறை தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இதேவேளை, இழப்பீடு வழங்கப்பட்டதைக் கண்காணிக்க 12 மனுக்கள் இன்று தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஏ.எச்.எம். டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபரினால் மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.