வவுனியா மடுக்கந்தபகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, குறித்த பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாசெடியும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


