3-உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு உரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் தேர்தலுக்கான உத்தேச செலவினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காகத் தேர்தல் விசாரணை பிரிவு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
