கியூபெக் மாகாணத் தேர்தல் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஐந்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த வார இறுதியில் முடிவு செய்யாத வாக்காளர்களை கவர்வதற்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
2029ஆம் ஆண்டு பிரிவினை தொடர்பான referendum நடத்தப்படும் என உறுதியளித்துள்ள Parti Québécois கட்சி, தேர்தல் பிரசாரம் முழுவதும் வெளியான கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் இருந்து வந்துள்ளது.
PQ தலைவர் Paul St-Pierre Plamondon மீது வெள்ளிக்கிழமை அவரது அரசியல் போட்டியாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். referendum ஒன்று நடத்தப்பட்டால், அது கியூபெக்கில் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிப்பதுடன், பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இந்தக் கருத்துக்கள் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சி என St-Pierre Plamondon தெரிவித்துள்ளார். மேலும், தனது கட்சிக்கு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் வகையில் ஆதரவு வழங்குமாறு கியூபெக் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Parti Québécois, Quebec Liberals, Quebec Conservatives, Québec Solidaire மற்றும் Coalition Avenir Québec ஆகிய ஐந்து கட்சிகளும் திங்கட்கிழமை நடைபெறும் தேர்தலில் ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கியூபெக்கில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் சுமார் நான்கில் ஒருவர் ஏற்கனவே முன்கூட்டிய வாக்குப்பதிவில் வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

