Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தொழிலதிபர்கள்

அக்டோபர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் முன்னணி தொழிலதிபர்கள் சிலர், அடுத்ததாக ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொன்றியலில்  நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், Groupe Dynamite நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Andrew Lutfy, கியூபெக் மக்கள் இனியும் தோல்விகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்ற செய்தியை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

கியூபெக் தற்போது முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தொழில் செய்வதற்கு அதிக கட்டுப்பாடுகள் கொண்ட மாகாணமாக கியூபெக் இருப்பதாகவும் Andrew Lutfy தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்களுடன் Couche-Tard நிறுவனத்தின் இணை நிறுவனர் Alain Bouchard உள்ளிட்ட பல தொழிலதிபர்களும் இணைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மாநிலங்களையும் கனடாவின் ஏனைய மாகாணங்களையும் ஒப்பிடும்போது, தனிநபர் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் ஆகியவற்றில் கியூபெக் கீழ்நிலையில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நிபுணர் Moshe Lander, கியூபெக்கில் அதிகளவான விதிமுறைகள் மற்றும் அரசாங்கக் கட்டுப்பாடுகள் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காரணிகளை அடுத்த அரசாங்கம் அகற்ற வேண்டும் என்பதே தொழில்துறை தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

எனினும், அந்தத் தடைகள் என்ன என்பதை அவர்கள் குறிப்பாக விளக்கவில்லை.

கியூபெக் மக்கள் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், பிரிவினை தொடர்பான referendum குறித்த விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்த அரசியல் நிலைமைகள் பல நிறுவனங்களுக்கு நிச்சயமற்ற சூழலை உருவாக்கக்கூடும் என Moshe Lander தெரிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களுக்கு நிச்சயமற்ற தன்மை சாதகமானது அல்ல என்றும், மொழி மற்றும் கலாசாரத்தைச் சுற்றியுள்ள சில கியூபெக் கொள்கைகள் நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக் தேர்தல் – இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள்
அடுத்த செய்தி சஷ்கச்சுவானில் வீடற்றோர் கணக்கெடுப்பு ரத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரபல உணவகத்தில் உணவுகளை உட்கொண்ட ஆறு பேர்  தப்பி ஓட்டம்

ஜூலை 13, 2026
கியூபெக்

கியூபெக்கில் ஆங்கிலம் பேசும் மக்கள் எளிதாக சுகாதார சேவைகளைப் பெற 52 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!

அக்டோபர் 16, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்தின் புதிய சட்டம்

அக்டோபர் 24, 2025
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

டிசம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?