October மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் பிரசாரத்தின் முதல் இரண்டு தொலைக்காட்சி விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த விவாதங்களில் Québec மாகாணத்தின் பொருளாதாரம், வாழ்க்கைச் செலவு, குடியேற்றம், பிரெஞ்சு மொழி, அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் தங்களது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
ஐந்து முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் பிரசாரம் தொடரும் நிலையில், அடுத்த கட்டத்தில் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான பிரசார நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் மற்றும் கட்சிகளின் பிரசார நிலைப்பாடுகள் தொடர்ந்து மாறக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.


