மொன்றியல் நகரத்தின் முன்னணி யூத உரிமைகள் அமைப்பான ‘இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்’ (CIJA) மீது 1,25,000 கனேடிய டொலர்கள் இழப்பீடு கோரி அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரத்தின் முன்னாள் இனவெறி மற்றும் முறைமைசார் பாகுபாடு எதிர்ப்பு ஆணையரான போக்ரா மனாய் (Bochra Manaï), இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
‘இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்’ தன்னை நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருடன் ஒப்பிட்டும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பிரசாரப் பொருட்களை வெளியிட்டதாக அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
“இது தமது கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் இழைக்கப்பட்ட மிகக் கடுமையான அவதூறுத் தாக்குதலாகும்” என, அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போக்ரா மனாய் சார்பில் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் ஜூலியஸ் கிரே (Julius Grey) ஆஜராகியுள்ளார்.
அதேவேளை, விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என ‘இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்’ மறுத்துவிட்டமை குறிப்பிடத் தக்கது.

