Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

சூடு பிடிக்கிறது கியூபெக் தேர்தல் களம்: PQ கட்சி மற்றும் லிபரல் கட்சிகளிடையே கடும் போட்டி!

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாகாணத்தின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான பார்ட்டி கியூபெகோவா (PQ) மற்றும் லிபரல் கட்சி ஆகியவற்றுக்கிடையே கடுமையான போட்டி நிலவுவதாகப் புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான பல்லாஸ் டேட்டா(Pallas Data) மற்றும் சினோப்சிஸ் (Synopsis) ஆகிய இரு வேறுபட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள், கியூபெக் தேர்தல் களம் ஒரு இறுக்கமான நிலையை எட்டியுள்ளதைக் காட்டுகின்றன. பார்ட்டி கியூபெகோவா கட்சியானது 29% முதல் 30% வரையிலான கியூபெக் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. லிபரல் கட்சி 28% முதல் 30% வரையிலான கியூபெக் மக்களின் ஆதரவுடன் சம பலத்தில் உள்ளது.

பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் மத்தியில் பார்ட்டி கியூபெகோவா (PQ) கட்சி 35% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளது. அதேவேளை, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைப் பேசுபவர்கள் மத்தியிலும், மொன்றியல் நகரப் பகுதிகளிலும் லிபரல் கட்சி பலத்துடன் விளங்குவது உறுதியாகியுள்ளது. கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) தலைமையிலான ஆளுங்கட்சியான சி.ஏ.க்யூ (CAQ) கட்சி கடந்த சில மாதங்களாகப் பின்னடைவைச் சந்தித்திருந்தது. ஆனால், தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அக்கட்சி 5 புள்ளிகள் உயர்ந்து 19% ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், கியூபெக் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக, சுகாதாரச் சீர்திருத்தம், வாழ்க்கைச் செலவு உயர்வு, வீட்டு வசதி தட்டுப்பாடு முதலான காரணிகள், இந்தக் கருத்துக் கணிப்புகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard) தனதுகட்சியின் செல்வாக்கை மீண்டும் உயர்த்தியுள்ள நிலையில், பி.க்யூ கட்சியின்  தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் தனது பிரெஞ்சு மொழி ஆதரவு தளத்தைத் தக்கவைக்கப் போராடுவதாக, கருத்துக் கணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 19 ஆண்டுகள் மர்மம் – கொலை வழக்கில் குற்றவாளி இவரா??
அடுத்த செய்தி சர்வதேச பாதுகாப்பு வங்கியினை அமைப்பதற்கு மொன்றியலை விட டொரண்டோவே தகுதியான இடம்-‘டக் ஃபோர்ட்’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

இஸ்ரேல் பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்பு.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் Fruits Haby உரிமையாளர் டொராண்டோ தமிழ்ச் சமூக மையத்திற்கு $50,000 நன்கொடை!

ஏப்ரல் 8, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
கியூபெக்

கஸ்பே தீபகற்ப மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?