மொண்ட்ரியல் காவல் துறை அதிகாரிகள் மீது எழுந்துள்ள இனவெறி மற்றும் இனப் பாகுபாட்டு முறைப்பாடுகள் குறித்த விசாரணையை நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடத்துவதை உறுதிசெய்யும் பொருட்டு, ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’ (Anne-Marie Boisvert) என்பவர் தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக (Independent Observer) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை கியூபெக் மாகாண அரசு அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
பொதுமக்கள் இந்த விவகாரத்தில் ஒரு வெளிப்படையான விசாரணை முறையை எதிர்பார்க்கிறார்ப்பதாகவும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர் ஆன்-மேரி போயிஸ்வெர்ட், மொண்ட்ரியல் காவல் துறை தங்களுக்குள் நடத்தும் குற்றவியல் மற்றும் ஒழுங்குமுறை விசாரணைகள் எவ்விதச் சார்புமின்றி நடுநிலையாக நடப்பதைத் தீவிரமாகக் கண்காணிப்பார் எனவும் மாகாண அமைச்சர் லஃப்ரினியர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது காவல் துறையின் ஒத்துழையாமை கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று, மாகாண அமைச்சர் லஃப்ரினியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இனப் பாகுபாடு சார்ந்த விவகாரத்தில் மொண்ட்ரியல் காவல் துறை தனக்குத்தானே விசாரணை நடத்திக் கொள்வது முறையற்றது என எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்தன.
இந்த விமர்சனங்களை அடுத்தே, கியூபெக் மாகாண அரசு தனிநபர் கண்காணிப்பாளரை நியமித்துள்ளது.


