Montréal நகரில் நடைபெறவுள்ள UCI உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகளை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
செப்டம்பர் 19ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த சர்வதேச போட்டிகளில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி சைக்கிள் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
போட்டிகளுக்கான பாதைகள் காரணமாக நகரின் பல முக்கிய வீதிகளில் தற்காலிகமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதி மூடல்கள் இடம்பெறவுள்ளன.
இதன் தாக்கம் பொதுப் போக்குவரத்திலும் காணப்படவுள்ளது.
சுமார் 30 STM பேருந்து வழித்தடங்கள் போட்டி நடைபெறும் நாட்கள் மற்றும் பகுதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், போட்டி நடைபெறும் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, நீண்ட நேர வீதி மூடல்களால் தங்களது வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்படக்கூடும் என சில Montréal வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
போட்டிகள் Montréal நகருக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நிலையில், போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பிலும் நகர நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.


