மொன்றியல் மற்றும் Greater Montréal பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை பல முக்கிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக, Autoroute 15 – Décarie பகுதியில் இன்று இரவு முதல் முக்கியமான மூடல்கள் இடம்பெறவுள்ளன. Jean-Talon Street மற்றும் Décarie interchange இடையே வடக்கு நோக்கிய A-15 நெடுஞ்சாலை, இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
அதேவேளை, Sauvé Street பகுதியில் இருந்து A-15 வடக்கு நோக்கிச் செல்லும் நுழைவுப்பாதை இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்படும்.
Sauvé Street மற்றும் de Salaberry Street இடையிலான A-15 வடக்கு நோக்கிய பகுதியிலும் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.
மேலும், Laurentides interchange பகுதியில் இருந்து A-40 கிழக்கு நோக்கிச் செல்லும் A-15 இணைப்பும் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
இதனால் A-15 பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
A-40 Métropolitaine நெடுஞ்சாலையில் Laurentides interchange முதல் Saint-Michel Boulevard வரையிலான கிழக்கு நோக்கிய பகுதி இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை முக்கியமான போக்குவரத்து கட்டுப்பாட்டை எதிர்கொள்ளவுள்ளது.
மேலும், Laurentides interchange பகுதியில் இருந்து A-15 North நோக்கிச் செல்லும் இணைப்பும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை மூடப்படவுள்ளது.
Bourget Boulevard மற்றும் Marien Avenue இடையிலான A-40 கிழக்கு நோக்கிய பகுதியிலும் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.
இதனால் இரவு நேரத்தில் A-40 வழியாக பயணிக்கும் சாரதிகள் கூடுதல் பயண நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
A-25 பகுதியில், Montréal மற்றும் Longueuil இடையிலான Louis-Hippolyte-La Fontaine Tunnel தொடர்பாகவும் நீண்டகால போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
மேலும், Montréal பகுதியில் உள்ள Anjou interchange பகுதியில் A-25 South நோக்கிச் செல்லும் நுழைவுப்பாதை இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
Downtown Montréal நோக்கிச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் சாரதிகளும் கவனம் செலுத்த வேண்டும். A-136 Ville-Marie பகுதியில், குறிப்பிட்ட பகுதிகளில் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ளன.
மேலும், Ville-Marie tunnel பகுதியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கிழக்கு நோக்கிய போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே Montréal நகருக்குள் இரவு நேரத்தில் பயணம் செய்யும் சாரதிகள், குறிப்பாக A-15, A-25, A-40 மற்றும் A-136 ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, தங்களது பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


