கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை பகுதியில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குளிரூட்டி பழுதுபார்க்கும் நிறுவனத்தில் எரிவாயு கசிவினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,
இத்தீவிபத்தில் குறித்த நிறுவனம் முழுமையாக தீயில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் எவ்வித உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.