Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

விக்டோரியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – விமானி உயிரிழப்பு

ஜூலை 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள விக்டோரியாவில்  (Victoriaville) பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று திறந்தவெளி நிலப்பரப்பில் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில், விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்த விமானத்தில் பயணித்த 20 வயதுடைய இளம் பெண் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரூட் டி எல் ஏரோபோர்ட் (Route de l’Aéroport) பகுதிக்கு அருகே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாகக் கியூபெக் மாகாண பொலிஸார் (Sûreté du Québec – SQ) உறுதிப்படுத்தியுள்ளனர்.

விமானம் தரையில் மோதிய கணத்திலேயே தீப்பிடித்து எரிந்தமையால், விமானியால் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புக் குழுவினர், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

கியூபெக் மாகாண பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் லூயிஸ்-பிலிப் ரூயல் (Louis-Philippe Ruel) வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்த பெண் விமானி 20 வயதுடையவர் என்றும், அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த தருணத்தில் விமானத்தில் வேறு எந்தப் பயணிகளும் இருக்கவில்லை என்றும், விமானி ஒருவர் மட்டுமே தனியாகப் பயணித்துள்ளார் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் தரைப்பகுதியில் இருந்த வேறு எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முழுமையான புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காகக் கியூபெக் மாகாண பொலிஸாரும் (SQ), கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புச் சபையும் (Transportation Safety Board of Canada – TSB) இணைந்து கூட்டாய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளன.

முந்தைய செய்தி எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கைது – முதலமைச்சர் விஜய் கண்டனம்
அடுத்த செய்தி மொன்றியலில் மாட்டு இறைச்சியில் “ஈ கோலை” பாக்டீரியா தொற்று உள்ளதாக சந்தேகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

உள்ளூர் பொருட்களை வாங்குமாறு கியூபெக் மாகாண அரசு பிரச்சாரம் மேற்கொள்கிறது!

ஏப்ரல் 11, 2025
இலங்கைமுதன்மை செய்தி

முகக்கவசம் அணியுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை.

பிப்ரவரி 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரத்தின் மேயர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கன்சர்வேடிவ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு, கியூபெக் மாகாணத்தில் கடுமையான எதிர்ப்பு!

ஏப்ரல் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?