மகா கும்பமேளா கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது.கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி ஆரம்பித்தது . தொடர்சியாக 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்த வருகை தந்த இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த கும்பமேளாவானது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்தது.
பிரயாக்ராஜ், கும்பமேளாவிற்காக இந்திய மதிப்பில் ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கும்பமேளாவிற்காக இடைக்கால தற்காலிக நகரம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த மகா கும்பமேளா எதிர்வரும் 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.