02.கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் வாழும் ‘லீஸ்ட் ஃபிளைகேட்சர்’ (Least Flycatcher) எனப்படும் மிகச் சிறிய பூச்சியுண்ணிப் பறவைகள், வழக்கத்தை விட இரண்டு வாரங்கள் முன்னதாகவே தங்கள் குளிர்கால இருப்பிடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.
கடந்த 32 ஆண்டுகளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த விரைவான மாற்றம், புவி வெப்பமயமாதல் இந்தப் பறவைகளின் இயற்கையான சுழற்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
ஆல்பர்ட்டாவில் உள்ள பீவர்ஹில் பறவை கண்காணிப்பு மையம் (Beaverhill Bird Observatory) மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
1980கள் முதல் பறவைகளின் எண்ணிக்கையை இந்த மையம் கண்காணித்து வருகிறது.