ஒன்ராறியோ மாகாணம் தனது 2030 ஆம் ஆண்டு காலநிலை மாற்ற இலக்குகளை எட்டுவதில் தடம் புரண்டுள்ளது என்று உள் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால், மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், இந்த இலக்குகளை அடைய “எங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்வோம்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மின்சார வலையமைப்பை பசுமையாக்க அணுசக்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றினால் வெளியிட்டப்பட்ட ஓர் அறிக்கை, ஒன்ராறியோ தனது முக்கிய காலநிலை மாற்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் மூன்று மெகாடன்கள் அளவுக்கு எட்டாமல் போகலாம் என்று கணித்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, முதல்வர் ஃபோர்ட், மாகாணம் இலக்கை அடைய கடினமாக உழைத்து வருவதாகவும், மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணுசக்தியை நம்பியிருப்பதாகவும் கூறியுள்ளார்.