பிரிட்டிஷ் கொலம்பியாவின் லைட்டன் அருகே கட்டுப்பாட்டை மீறிப் பரவி வரும் காட்டுத் தீயால், தாம்சன்-நிகோலா பிராந்திய மாவட்டம் ஆனது, “ப்ளூ ஸ்கை கன்ட்ரி” பகுதிக்கு உள்ளூர் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
இது, உயிர்களுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், ஸ்பென்சர் ரோடு சவுத்-இல் உள்ள இரண்டு பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியேற்றுதல் ஆணை என்பது, ”அப்பகுதிகளில் உள்ளவர்கள் அபாயத்தில் உள்ளதால் உடனடியாக வெளியேற வேண்டும்” என்பதைக் குறிக்கிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத் தீ சேவை (BCWS) தகவல்படி, “நிகையா கிரீக்” (Nikaia Creek) காட்டுத் தீ செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி சுமார் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.
இந்தத் தீ, மாகாணம் முழுவதும் எரிந்து வரும் 70 க்கும் மேற்பட்ட காட்டுத் தீக்களில் ஒன்றாகும்.